மனைவியுடன் சண்டை – ஊரடங்கை மறந்து 450 கிலோ மீட்டர் நடந்து ரூ.3600 அபராதம் கட்டிய கணவன்!

Default Image

ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தாலியில் தனது மனைவியுடன் சண்டையிட்டுக்கொண்டு மன அமைதிக்காக விரக்தியில் 450 கிலோ மீட்டர் நடந்த நபர் 36 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டி உள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்பொழுது வரையிலும் அமலில் உள்ளது. சில இடங்களில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கொரோனா தொற்று அளவை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தாலியில் தற்பொழுது கொரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் 400 டாலர் அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 36 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தாலியை சேர்ந்த 48 வயதான ஒருவர் தனது மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் கோபத்தில், மன அமைதியை ஏற்படுத்துவதற்காக வெளியில் நடக்க ஆரம்பித்துள்ளார். நடந்து கொண்டிருந்தவர் 450 கிலோ மீட்டர் வரையிலும் நடந்து சென்றுள்ளார். நடந்து சென்ற இவர் ஒரு நாளைக்கு 65 கிலோ மீட்டர் என மொத்தம் 450 கிலோ மீட்டர் வரை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர் ஊரடங்கு நேரத்தில் வெளியில் அலைவதை அறிந்த காவல்துறையினர் ஊரடங்கு விதியை மீறி வெளியில் நடந்ததால் அபராதம் விதித்துள்ளனர். மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டு வெளியில் நடந்த கணவர் 36 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் கட்டியுள்ள சம்பவம் வேடிக்கையாக இருந்தாலும் ஒருபுறம் வருத்தம் அளிக்க கூடியதாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

SRHvsMI
Ajith Kumar Racing
ponmudi - highcourt
Vijay -Waqf Amendment Bill
Munaf Patel FINE
Dhankar