அதர்வா நடிக்கும் “குருதி ஆட்டம்” படத்தின் புது அறிவிப்பு.!

நடிகர் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசம்பர் 8-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் குருதி ஆட்டம் . 8 தோட்டாக்கள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்குகிறார் .யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் அதர்வா அவர்களுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.மேலும் ராதிகா சரத்குமார்,ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படத்தின் புதிய அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.குருதி ஆட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசம்பர் 8-ம் தேதி வெளியிட உள்ளதாகவும், படத்தின் டீசரை டிசம்பர் 11-ம் தேதி வெளியிட உள்ளதாகவும் இயக்குனர் அறிவித்துள்ளார்.
Here it is… #KuruthiAattam. Thanks to all the people who kept asking for updates. @Atharvaamurali @priya_Bshankar @thisisysr @Rockfortent @FiveStarAudioIn @kbsriram16 @DoneChannel1 pic.twitter.com/UUKkjLwF3d
— Sri Ganesh (@sri_sriganesh89) December 6, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!
April 15, 2025
எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!
April 15, 2025