சுரப்பா மீது ஊழல் புகார் – ஆவணங்களுடன் நாளை நேரில் ஆஜராக உத்தரவு
சூரப்பா மீதான புகார் தொடர்பாக கலையரசன் விசாரணை குழு முன்பு நாளை ஆஜராகுமாறு அண்ணா பல்கலைக்கழக கருணாமூர்த்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக அவர் மீது புகார்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டது.எனவே சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்தது தமிழக அரசு.மேலும் மூன்று மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நீதிபதிகலையரசன் குழு, அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.ஆவணங்களுடன் நாளை அண்ணா பல்கலைக்கழக கருணாமூர்த்தி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா விசாரணை தொடர்பான ஆவணங்களை அளிக்காததால் பதிவாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டடுள்ளது.