தடைகளை தாண்டி வேல் யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது – எல்.முருகன்
பல்வேறு தடைகள் இருந்த போதிலும் அவை அனைத்தையும் தாண்டி வேல் யாத்திரை துவங்கி, இன்று வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6-ம் தேதி தொடங்கிய வேல் யாத்திரையானது, இன்று நிறைவு பெறுகிறது இந்த நிறைவு நாள் நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெறுகிற நிலையில், இந்த நிகழ்ச்சியில், பல தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர் வேல் யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அது நிறைவு விழா நிகழ்ச்சிகள் திருச்செந்தூரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்றும், எதிர்பார்த்ததைவிட வேல் யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என்றும், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி அவர்கள் அதற்குப் பின்புலமாக இருந்தவர்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்செந்தூரில், உள்ளரங்கில் நிறைவு நாள் விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்வேறு தடைகள் இருந்த போதிலும் அவை அனைத்தையும் தாண்டி வேல் யாத்திரை துவங்கி, இன்று வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்றும், நிறைவு நாள் நிகழ்ச்சியில் இருக்கும் தடைகளை உடைத்தெறிந்து பாஜக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், யாத்திரை மிகப்பெரிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.