நேரம் கனிந்துவிட்டது, டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்க வேண்டும் – முகமது கைப் ஆதரவு
சிறப்பாக விளையாடிய பாண்டியாவை டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைப் தெரிவித்துள்ளார்.
கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள், மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது.இதனைத்தொடர்ந்து 3 போட்டிகளை கொண்ட டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில் ,தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.நாளை கடைசி டி-20 போட்டி சிட்னியில் நடைபெறுகிறது.பின்னர் நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.
ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் சிறந்த ஆல் -ரவுண்டர்களில் ஒருவராக வர்ணிக்கப்படும் பாண்டியா சிறப்பாக விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்தவர் பாண்டியா தான்.3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாண்டியா 210 ரன்கள் அடித்துள்ளார்.பேட்டிங் சராசரி 105 ஆகவும்,ஸ்ட்ரைக் ரேட் 114.75 ஆகவும் உள்ளது.ஆகவே பாண்டியாவை டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைப் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கைப் ,ஹர்டிக் பாண்டியா 90 சராசரியுடன் இருக்கின்ற நிலையில் , டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலிக்கு பின் இந்திய அணியின் பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும்.அதாவது ஹர்டிக் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவதற்கான நேரம் கனிந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
.@hardikpandya7, with an average of nearly 90, has emerged as India’s go to batsman in white ball cricket, behind @imVkohli. Time is ripe for Hardik to be added to the Test squad, in this red hot form worth holding him back in Australia
— Mohammad Kaif (@MohammadKaif) December 6, 2020