தனித்தன்மையுடன் விளையாடுபவர்களை நாமினேட் செய்து வெளியேற்றுகிறார்கள் .! அர்ச்சனா குரூப் குறித்து டிஸ்கஸ் செய்யும் பாலாஜி,ஆரி.!

தனித்தன்மையுடன் விளையாடுபவர்களை நாமினேட் செய்து வெளியேற்றுகிறார்கள் என்று அர்ச்சனா குரூப் குறித்து ஆரி, பாலாஜி மற்றும் அனிதா ஆகியோர் டிஸ்கஸ் செய்கின்றனர் .
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்றைய தினம் சனம் வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .தனியாக நின்று விளையாடிய அவர் வெளியேற குரூப்பாக விளையாடும் சிலர் இன்னும் வீட்டினுள் உள்ளனர் . இதுகுறித்து தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் ,ஆரி,அனிதா மற்றும் பாலாஜி ஆகியோர் விமர்சனம் செய்து பேசுகின்றனர் .
அதில் ஒவ்வொருத்தரையும் காப்பாற்றி விளையாடிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் உள்ளே இருக்கின்றார்கள் என்றும், தனித்தன்மையுடன் விளையாடுபவர்கள் எல்லாம் வெளியேறிக்கொண்டே இருக்கின்றார்கள் என்றும் ஆரி கூறுகிறார்.
அப்போது ’இது என்ன கேம் ,ஏன் இந்த கேமை விளையாட வேண்டும்? என்று அனிதா சலிப்பாக கூறுகிறார். தனித்தன்மையுடன் விளையாடுபவர்களை வெளியேற்றி கொண்டே இருந்தால் அந்த குரூப் வலிமையாக உள்ளையே இருப்பார்கள்.இன்று சனம் வெளியேறியதை நாம் அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்தால் நாளைக்கு எனக்கும் உனக்கும் அப்படித்தான் நடக்கும் என்று ஆரி கூறுகிறார்.அப்போது பாலாஜி இதையேதான் நான் இரண்டு வாரங்களுக்கு முன் கூறினேன். பிக்பாஸ் வீட்டில் இன்பேலன்ஸ் வரப்போகிறது என்று கூறுவதுடன் புரமோ முடிவடைகிறது.
#Day64 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Q2u0EEf34l
— Vijay Television (@vijaytelevision) December 7, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025