போஸ்ட் ஆபிசில் இப்படி திட்டமா? வருமானத்திற்கான சிறந்த வழி இதோ!
இந்திய தபால் துறை சார்பில் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் கொண்ட ‘தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்’ வழங்கப்பட்டுள்ளது.
இன்று பலரும் தங்களது வருமானத்தை சேமிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்திய தபால் துறை சார்பில் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் வழங்கப்படுகின்றது. இவை ஒட்டுமொத்தமாக ‘தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்’ என அழைக்கப்படுகிறது. தற்போது இந்திய அரசு ஒன்பது தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களை வழங்குகின்றன.
அவை பப்ளிக் பிராவிடண்ட் பண்ட், தேசிய சேமிப்புச் சான்றிதழ், சுகன்யா சம்ரிதி யோஜனா, டைம் டெபாசிட், சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் உள்ளிட்டவை இதில் அடங்கும். குறிப்பாக தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் பிரதமர் மோடியை முதலீடு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தபால் அலுவலகங்கள் என்ன வட்டி வழங்கப்படுகிறது என்பது விபரத்தை பார்க்கலாம்.
- தபால் அலுவலக சேமிப்பு கணக்கிற்கு ஆண்டுக்கு 4% வட்டி வழங்கப்படுகிறது.
- தபால் அலுவலக கால டெபாசிட் கணக்கிற்கு 1 முதல் 3 ஆண்டுகளுக்கு 5.5% வட்டியும், ஐந்து ஆண்டு டெபாசிட்டுக்கு 6.7% வட்டியும் வழங்ப்படுகிறது.
- தொடர் வைப்புத் திட்டத்திற்கு, அதாவது தபால் அலுவலக தொடர்பு திட்டங்களுக்கு 5.8% வட்டி வழங்கப்படுகிறது.
- சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது.
- மாத வருமான திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.6% வட்டி வழங்கப்படுகிறது.
- தேசிய சேமிப்பு திட்டத்திற்கு ஆண்டுக்கு 1.8% வட்டி வழங்கப்படுகிறது
- பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது.
- கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்திற்கு 6.9% வட்டி வழங்கப்படுகிறது.. இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை 124 மாதங்களில் இருமடங்காக உயர்த்தப்படும்.
- சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது.