இங்கு முதல்வராக வரவில்லை; தன்னார்வலராக வந்துள்ளேன் – அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு ..!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று சிங்கு எல்லைக்கு (டெல்லி-ஹரியானா எல்லை) சென்று அங்கு முகாமிட்டுள்ள விவசாயிகளுக்காக மாநில அரசு செய்த ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அவருடன் மற்ற அமைச்சர்களும் சென்றனர்.
ஆய்வு முடித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். விவசாயிகளின் பிரச்சினை மற்றும் போராட்டம் முற்றிலும் நியாயமானது. ஆரம்பத்தில், விவசாயிகள் எல்லைக்கு வந்தபோது, மத்திய அரசு, டெல்லி காவல்துறை டெல்லியின் 9 ஸ்டேடியத்தை சிறையாக மற்ற அனுமதி கேட்டது, இதனால் எனக்கு பல அழைப்புகள் வந்தன, நிறைய அழுத்தங்களும் வந்தன. நான் என் மனசாட்சியைக் கேட்டேன். அந்த முடிவால் விவசாயிகள் இயக்கம் பாதிக்கப்படும் என்று நினைத்து அனுமதிக்கவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே விவசாயிகள் இயக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறோம் என்றும், அரசாங்கம் அவர்களுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், நான் இன்று முதல்வராக இங்கு வரவில்லை, இங்கு தன்னார்வலராக வந்துள்ளேன். இங்குள்ள ஏற்பாட்டையும் பார்த்திருக்கிறேன். சில நீர் பிரச்சினை உள்ளது, அது விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்தார்.
பாரத் பந்த்தை நாங்கள் அதை ஆதரிக்கிறோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். 12 நாட்களாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து விவசாயிகள் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் அமைதியான போராட்டங்களை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.