கர்நாடகாவில் 24 வயது பெண்ணின் 4 விரல்களை வெட்டிய தந்தை மற்றும் மகன்

Default Image

கர்நாடகாவை சேர்ந்த 24 வயது பெண்ணின் 4 விரலைகள் வெட்டிய தந்தை மற்றும் மகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

கர்நாடகாவை சேர்ந்த தனலட்சுமி என்ற 24 வயது பெண் சத்யா என்ற இளைஞரை 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.இவர்கள் இருவரும் சாமராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவின் பி.ஜி.பல்யா கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தனலட்சுமியின் பெற்றோர்  திருமணத்திற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

ஆட்சேபனை இருந்தபோதிலும், தனலட்சுமியும் சத்யாவும் திங்களன்று  திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதே தகவல் தனலட்சுமியின் குடும்பத்தினரை கோபடையச் செய்துள்ளது.

சனிக்கிழமை, சிறுமியின் தந்தையும் சகோதரரும் தனலட்சுமியை ஒரு மருந்து  கடைக்கு அருகே பார்த்தார்கள், இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் அதிகரித்தபோது, ​​இரண்டு பேரும் தனலட்சுமியைப் பிடித்து அவளது நான்கு விரல்களை வெட்டியுள்ளனர்.

இதனைக் கண்ட ஊர் மக்கள் தனலட்சுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இந்த கொடூர குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்