முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஜெர்சி ரூ.14,100,000 ஏலம்..!

Default Image

1979 ஆம் ஆண்டில் ஹவாயில் உள்ள புனாஹூ பள்ளியில் கூடைப்பந்து போட்டியின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா அணிந்திருந்த ஜெர்சி கடந்த வெள்ளிக்கிழமை கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் நடந்த ஏலத்தில் 192,000 டாலர் அதாவது ஒரு கோடியே 41 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

இந்த ஏலம் உயர்நிலைப் பள்ளி கூடைப்பந்து ஜெர்சி ஏலங்களுக்கு புதிய உலக சாதனை படைத்தது. ஒபாமாவின் உயர்நிலைப் பள்ளி கூடைப்பந்து ஜெர்சி முந்தைய உலக சாதனையை முறியடித்ததாக ஏல நிறுவனமான ஜூலியன் ஏலம் ட்வீட் செய்துள்ளது. உயர்நிலைப் பள்ளி கூடைப்பந்து ஜெர்சிக்கான முந்தைய சாதனை  187,500 க்கும் அதிகமாக விற்கப்பட்டது. அதாவது ஒரு கோடியே 38 லட்சமாக இருந்தது.


ஒபாமா அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியாக இருந்தார். 20 ஜனவரி 2009 அன்று பதவியேற்றார். அவர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக இருந்தார். ஒபாமா 1991 இல் ஹார்வர்ட் பள்ளியில் பட்டம் பெற்றார். உலக அமைதிக்கு சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக  ஒபாமாவுக்கு 2009 அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்