டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் மற்றும் அவரது மனைவி விபத்தில் உயிரிழப்பு!
டெல்லி பாஜக யுவ மோர்ச்சா செய்தித் தொடர்பாளர் சந்தீப் சுக்லா மற்றும் அவரது மனைவி அனிதா இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி, ததியா கிராமத்திற்கு அருகே, சந்தீப் சுக்லா மற்றும் அவரது மனைவி அனிதா அவர்களது, மூன்று மகன்கள் மற்றும் இரண்டு அண்டை வீட்டார் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதாப்கருக்கு சென்றுள்ளனர். அப்போது லாரி மீது மோதியதில், டெல்லி பாஜக யுவ மோர்ச்சா செய்தித் தொடர்பாளர், அவரது மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அவர்களது மகன்களான சித்தார்த், அபிநவ், ஆரவ் மற்றும் அண்டை வீட்டாரான அமித் குமார் மற்றும் ஆரிய ஷர்மா ஆகியோர் இந்த சம்பவத்தில் காயம் அடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் திருநகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து டெல்லியில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தீப் சுக்லா மற்றும் அவரது மனைவி மறைவுக்கு டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா இரங்கல் தெரிவித்துள்ளார்.