2021-ல் இதை செய்யாவிட்டால், உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட் டெலிட் ஆக வாய்ப்பு!

Default Image

2021 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates-ஐ கட்டாயம் ஏற்க வேண்டும். இல்லையெனில் உங்களின் வாட்ஸ்அப் கணக்கை டெலிட் செய்ய வாய்ப்புள்ளது.

தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அரட்டை அடிப்பது, செய்திகளை தெரிந்துக் கொள்வது, ஆன்லைன்வகுப்புகள் வரை நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் இலவசமாக பேசி மகிழலாம்.

இந்நிலையில் வாட்ஸ்அப், இந்தாண்டு ஜனவரி முதல் ஒரு புதிய நிபந்தனையை கொண்டுவரவுள்ளது. அது, வாட்ஸ்அப்பின் Terms and Privacy Policy Updates-ஐ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனுடன் உடன்பாடு இல்லையெனில், உங்களது வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என வாட்ஸ்அப் நிர்வாகம் கூறியது. இது பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக WABetaInfo வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பயனர்கள் புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கப்படம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பயனர்களின் சாட்களை சேமிக்கவும், ஃபேஸ்புக்-ல் வழங்கும் சேவைகளை வணிகங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய தகவல்களையும் பகிர்ந்துள்ளது.

நீங்கள் வாட்ஸ்அப் தொடர்ந்து உபயோகிக்க வேண்டுமானால், அடுத்த ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் புதிய விதிமுறைகளுக்கு must agree என்பதை கிளிக்செய்ய வேண்டும். மேலும், இந்த புதிய நிபந்தனைகள், பிப்ரவரி 8 2021 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்