கொரோனாவால் வந்த பிரச்சனை.! இல்லற வாழ்க்கைக்கு தகுதியற்றவர் என்று கூறி பிரிந்த சென்ற பெண் .!
கொரோனா அச்சம் காரணமாக விலகியிருந்த கணவர் தன்னிடமிருந்து உடல் ரீதியான இடைவெளியை பின்பற்றுவதாகவும் ,அவர் இல்லற வாழ்க்கைக்கு தகுதியற்றவர் என்றும் கூறி தாய் வீட்டிற்கு பெண் சென்றுள்ளார்.
மத்திய பிரதேசம் போபாலில் கடந்த ஜூன் மாதம் திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் கொரோனா அச்சம் காரணமாக தன்னிடமிருந்து உடல் ரீதியான இடைவெளியை பின்பற்றுவதாகவும்,அவர் இல்லற வாழ்வில் தகுதியற்றவர் என்றும் கூறி கணவர் வீட்டிலிருந்து பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
கடந்த ஜூன் 29-ம் தேதி கொரோனா ஊரடங்கில் இந்த தம்பதியினரின் திருமணம் நடைபெற்றது . திருமணத்திற்கு பின் அந்த பெண்ணிற்கு கணவரிடமிருந்து உடல் ரீதியான எந்த சந்தோஷமும் கிடைக்கவில்லை என்றும் ,அவர் தன்னிடமிருந்து உடல் ரீதியான இடைவெளியை பின்பற்றுவதாகவும் கூறி அந்த பெண் கணவர் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார் .மேலும் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு கணவர் இல்லற வாழ்க்கைக்கு தகுதியற்றவர் என்று கூறியதுடன் தனது மாமியார் தன்னை துன்புறுத்தியதாகவும் பெண் குற்றம்சாட்டினார்.
அதனையடுத்து கடந்த டிசம்பர் 2-ம் தேதி அந்த பெண் கணவரிடமிருந்து தனக்கு இழப்பீட்டு தொகையை வாங்கி தர கோரி சட்ட உரிமை அமைப்பை அணுகினார்.தனக்கு முன்னோக்கி வாழ்க்கையை நடத்த கணவர் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.
அதனையடுத்து சட்ட உரிமை அமைப்பின் அதிகாரிகள் அப்பெண்ணின் கணவரிடம் பேசிய போது ,அவரது திருமணத்திற்கு பிறகு அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் ,எனவே அவரும் அறிகுறி எதுவுமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகித்ததாகவும் ,அதனாலையே அவர் மனைவியிடமிருந்து விலகி இருந்ததாகவும் கூறியுள்ளார் .மேலும் தனக்கு இல்லற வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இருப்பினும் அதிகாரிகளின் ஆலோசனையின் படி ,அந்த நபர் இல்லற வாழ்வில் தகுதியானவர் என்பதற்கான பரிசோதனை மேற்கொண்ட பின்னர்,அதற்கான ரிசல்ட் வெள்ளிக்கிழமை அன்று சாதகமாக வந்தது .அதன் பின் அந்த பெண்ணிடம் பேசி கணவருடன் திருப்பி அனுப்பி வைத்தனர்.