காயம்பட்ட பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து பராமரிக்கும் புத்த மத துறவி!
காயம்பட்ட பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து பராமரிக்கும் புத்த மத துறவி வில்லாதா, பாம்புகளுக்கு சிகிச்சை அளித்து குணமடைந்த பின், காட்டுக்குள் விடுகிறார்.
மியான்மர் நாட்டை சேர்ந்த புத்த மத துறவி வில்லாதா. இவருக்கு வயது 69. இவர் தான் தங்கியிருக்கும் சேக்காடு மடத்தில், பாம்புகளுக்கு என்று தனியாக அடைக்கலம் கொடுத்து பராமரித்து வருகிறார். இவர் வைத்துள்ள இந்த முகாமில் மலைப் பாம்பு, கண்ணாடி விரியன், ராஜநாகம் ஆகியவை பாதுகாக்கப்பட்டு பராமரித்து வருகிறார்.
இவர் இந்த பாம்புகளை எந்த பயமும் இல்லாமல், கையாளுவதோடு, இந்த பாம்புகளுக்கு அவர் தினமும் உணவளித்து, சுத்தம் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாம்புகள் இயற்கையின் ஒரு அங்கம். அவற்றை பாதுகாப்பது முக்கியமானதாக கருதுகிறேன். பாம்புகளை கண்டால் சிலர் கொன்று விடுகிறார்கள் அல்லது இறைச்சிக்காக விற்று விடுகிறார்கள்.
அதனைத் தவிர்க்கவே, நான் பாம்புகளை பராமரித்து வருகிறேன். பாதுகாக்கவும் பராமரிக்கவும் 300 அமெரிக்க டாலர்கள் மாதம் செலவாகும் என தெரிவித்துள்ளார். காட்டிலிருந்து காயமடைந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, மருத்துவ சிகிச்சை செய்யப்பட்ட பின், அவர் மீண்டும் அந்த பாம்புகளை காட்டுக்குள்ளே விட்டுவிடுகிறார். இந்த புத்தமதத் துறவிகளால் கயவர்களிடம் பாம்புகள் சிக்காமல் அதனை பாதுகாத்து வருவதோடு வருவதால், இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.