மீண்டும் அரசு கொடுத்த உணவை மறுத்த விவசாயிகள்..!
மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர்ந்து டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேச விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று ஐந்தாவது முறையாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்க தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது, இதில் பல்வேறு விவசாய அமைப்புகளின் 40 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை விஜியன் பவனில் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது,மேலும் இடைவேளையின் போது உணவு மற்றும் தேநீர் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவித்தனர். ஆனால், விவசாயிகள் சங்க தலைவர்கள் அரசின் உணவை சாப்பிட மறுத்து தங்கள் கொண்டுவந்த தேநீர் மற்றும் உணவை சாப்பிட்டனர்.
இதற்கு முன் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதும் அரசு உணவை நிராகரித்து தங்கள் கொண்டுவந்த உணவு, தேநீர் மற்றும் தண்ணீரை சாப்பிட்டனர்.