கையில் ஏற்பட்ட காயத்திற்கு தவறான சிகிச்சை – குழந்தை உயிரிழப்பு!

Default Image

கீழே விழுந்து கையில் ஏற்பட்ட காயத்திற்கு கோவை முத்தூஸ் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனுப்பர்பாளையம் கோவில் வீதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் – திவ்யபாரதி தம்பதிகளின் மூன்றரை வயது மகள் தான் பிரியதர்ஷினி. கடந்த வாரம் வீட்டில் இருந்து கழிவறைக்கு செல்லும் படியில் ஏறும்போது பிரியதர்ஷன் தடுமாறிக் கீழே விழுந்ததில் அவரது இடது கை மட்டும் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது கை வீங்கி காணப்பட்டுள்ளது. எனவே பிரியதர்ஷினியை திருப்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கையில் ஆபரேஷன் செய்வதற்கு அந்த மருத்துவமனையில் வசதிகள் இல்லை எனவும் மேல் சிகிச்சைக்காக கோவை செல்ல வேண்டும் எனவும் மருத்துவர் கூறியுள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் சிறுமியை சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.

அப்பொழுது மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனை அடுத்து நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிறுமிக்கு ஆபரேஷன் நடைபெற்றுள்ளது. ஆனால் ஆபரேஷன் செய்த பிறகு சிறுமி உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஒருபுறம் கதறி அழுதும், மறுபுறம் சண்டை இடவும் செய்துள்ளனர். மேலும் கையில் ஏற்பட்ட காயத்திற்கு எப்படி மொத்தமாக உயிர் போகும் எனவும் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைக்கு சரியாக மருத்துவம் செய்யாததால் தான் குழந்தை இறந்துவிட்டதாக சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தியபோது பிரியதர்ஷினிக்கு முத்தூஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்து அதனால், குழந்தை இறந்துவிட்டதாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பின் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் உடலை கொண்டு சென்றுள்ளனர். ஆபரேஷன் முடிந்த பின்பு குழந்தையின் இருதயம் வேலை செய்யாமல் இருந்துள்ளது. சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று நினைத்தோம் ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையில் சாதாரணமாக ஏற்பட்ட காயத்திற்கு மூன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்