காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது.!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தமிழகத்தின் பல்வேறு கடலோரா மாவட்டங்களில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி:
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேசுகையில், மன்னர் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில நிலை கொண்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும், இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்க கூடும் என தெரிவித்தார்.
8 மாவட்டங்களுக்கு கனமழை:
இதன் காரணமாக; கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் ஆகிய 8 பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார்.