கேப்டன் கிங் கோலியை சரமாரியாக விமர்சித்த வீரேந்திர சேவாக்.!

Default Image

கடந்த ஆண்டு முதல் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேற்றைய போட்டியில் எந்த அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது – சேவாக் 

ஆஸ்திரேலியாக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. இதனால் கேப்டன் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மூன்று டி20 போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி, நேற்று நடைபெற்ற முதல் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது.

இருப்பினும், இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றாலும் கேப்டன் கோலி பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள முன்னாள் அதிரடி வீரர் சேவாக், கடந்த ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து ஸ்ரேயாஸ் அய்யர் 4-வது இடத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அவரை அமர வைத்துள்ளார் கோலி.

கடந்த ஆண்டு முதல் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு எந்த அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவரை அமர வைக்க ஏதேனும் காரணமா உள்ளதா? விதிமுறை என்றால் அது அனைவருக்கும் ஒன்றுபோல் இருக்க வேண்டும். அணியில் 10 வீரர்களுக்கு மட்டும்தான் விதிமுறை, கோலிக்கு இல்லையா என்று பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பேட்டிங் வரிசையிலும் கோலி தன்னுடைய இடத்தை மாற்றிக்கொள்ளமாட்டார். தான் மோசமான ஃபார்மில் இருந்தால் கூட யாருக்கும் தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுக்கமாட்டார். இப்படி இருப்பது மிகவும் தவறானது. தொடர்ந்து பேசிய சேவாக், புதிதாக ஐசிசி அறிமுகம் செய்துள்ள கன்கஸன் விதியைப் பொருத்தவரை ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக சாஹலை விளையாட வைத்தது சரியானதுதான். இது இந்திய அணிக்கு கிடைத்த அற்புத வாய்ப்பு என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்