7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் கனவை நினைவாக்கிய முதல்வருக்கு நன்றி!
7.5% உள் இட ஒதுக்கீடுமூலம் மருத்துவ படிப்பில் இடம் பெற்ற சிவகங்கையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.
மருத்துவ கல்லூரி சேர்க்கையில் அரசு பள்ளியில் பயின்று வரக்கூடிய மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு தருவதற்கான சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தா நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் தற்பொழுது சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் பல்வேறு மாணவர்கள் தற்போது முதலே பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த மாணவிகள் சார்பில் சிவகங்கையில் இன்று விழா நடத்தப்பட்டுள்ளது, அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் கலந்துகொண்டுள்ளார்.
இந்த விழாவில், அரசு பள்ளி மாணவர்கள் பள்ளியில் பயின்று 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டம் மூலமாக மருத்துவ படிப்பிற்கான இடம் பெற்ற மாணவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். இது குறித்து மாணவர்கள் கூறுகையில், அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்ற நாங்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதை சந்தேக கனவாக வைத்துக் கொண்டிருந்தோம். கூலி தொழில் செய்யும் பெற்றோர்களுடன், எங்கள் கனவு நினைவாகுமா என்பது குறித்து கவலையில் இருந்த எங்களுக்கு முதல்வரின் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு காரணமாக தற்போது மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்களது கனவை நனவாக்கிய முதல்வருக்கு நன்றி என மாணவிகள் தெரிவித்துள்ளனர்.