செல்வி ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம்! ஓபிஎஸ், ஈபிஎஸ் அஞ்சலி!

Default Image

செல்வி ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

தமிழகத்தில், அதிமுகவின் பொதுச் செயலாளராக 6-வது முறை முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, உலகைவிட்டு மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அங்கு தற்போது பிரமாண்டமான நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காவது நினைவு தினத்தை அடுத்து, அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்த உள்ளனர். இன்று காலை 10:45 மணியளவில் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ள நிலையில், கொரோனா நடவடிக்கையாக, பொது நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் குறிப்பிட்ட அளவை பங்குபெற அனுமதிக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில், மற்ற மாவட்டங்களிலும் அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் உருவ படத்தை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும் என அதிமுக தலைமை வலியுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்