பந்துவீச்சில் மிரட்டிய நடராஜன்.. 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் நடராஜனின் அற்புத பந்துவீச்சால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டி இன்று கான்பெரா, ஓவன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் இந்திய அணி களமிறங்கியது. சிறப்பாக ஆடிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 161 ரன்கள் அடித்தது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 44*, கே.எல்.ராகுல் 51 ரன்கள் அடித்தார்கள். மேலும், இந்த போட்டியில் ஜடேஜாக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு பதில் சாஹல் ஆடினார்.

இதனையடுத்து 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி ஆர்சி – பின்ச் களமிறங்கினார்கள். இவர்களின் கூட்டணி நிதாரணமாக ஆடிவந்த நிலையில், 35 ரன்களில் பின்ச் தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து நடராஜனின் பந்துவீச்சால் 12 ரன்களில் ஸ்மித் பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய அதிரடி வீரர் மெக்ஸ்வெல் 2 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேற, டி ஆர்சி 34 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய வெட் 7 ரன்கள் அடித்து வெளியேறினார்.

இறுதியாக ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. பந்துவீச்சை பொறுத்தளவில் யாக்கர் மன்னன் நடராஜன் மற்றும் சாஹல் தலா 3 விக்கெட்களையும், தீபக் சஹர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்த தொடரில் தற்பொழுது இந்திய அணி, 0-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.