மிஸ் பண்ணிராதீங்க: தொடங்கியது POCO days விற்பனை.. போக்கோ இந்த மொபைல்களுக்கு அதிரடி சலுகை!

Default Image

பிளிப்கார்ட்-ன் போக்கோ டேஸ் விற்பனை தொடங்கிய நிலையில், எந்தெந்த மொபைல்கள் விலை குறைந்துள்ளது என்பது குறித்து காணலாம்.

பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஷாப்பிங் தளங்கள், தொடர்ந்து பல விற்பனையை அறிமுகப்படுத்தி கொண்டே வருகின்றனர். அண்மையில் அறிமுகப்படுத்திய Black Friday Deals விற்பனையில் குறைந்த விலையில் பல மொபைகளை விற்பனை செய்தது. இதனைதொடர்ந்து தற்பொழுது போக்கோ மொபைல்களை சலுகை விலையில் POCO days என்ற விற்பனை மூலம் விற்கப்பட்டு வருகிறது. இந்த விற்பனை, டிசம்பர் 3 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெறும்.

போக்கோ C3:

போக்கோ C3 ஸ்மார்ட்போன், ரூ.9,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 6.53 இன்ச் கொண்ட ஒரு பெரிய டிஸ்பிளேயும், 5000 Mah கொண்ட பேட்டரியும், 13 +5 MP ரியர் கேமரா, 5 MP செல்பி கேமரா மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி35 ஆக்டா கோர் பிராசஸர் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. தற்பொழுது இந்த விற்பனையில் ரூ.6,999க்கு விற்கப்பட்டு வருகிறது.

போக்கோ M2:

போக்கோ M2, இது தற்பொழுது ரூ.12,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது போக்கோ டேஸ் விற்பனையின் மூலம் ரூ.9,999 க்கு வாங்கலாம்.இதில் 6.53 இன்ச் பெரிய டிஸ்பிளே, 13MP + 8MP + 5MP + 2MP என மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள், 8MP செல்பி கேமரா, 5000Mah பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ G80 ஆக்டோ-கோர் நானோ மீட்டர் பிராசஸர் என பல அம்சங்களை கொண்டுள்ளது.

போக்கோ M2 pro:

போக்கோ M2 pro ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட் தளத்தில் ரூ.16,999க்கு விற்பனை செய்து வந்தது. தற்பொழுது இந்த விற்பனை மூலம் ரூ.12,999 க்கு விற்கவுள்ளது. இதில் 6.67 இன்ச் பெரிய டிஸ்பிளே, 48MP + 8MP + 5MP + 2MP என மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள், 16MP செல்பி கேமரா, 5000 Mah பேட்டரி, ஸ்னாப்டிராகன் 720G ஆக்டோ-கோர் 8நானோ மீட்டர் பிராசஸர் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

போக்கோ X3:

சமீபத்தில் வெளியான போக்கோ X3 ஸ்மார்ட்போனின் விலை, ரூ.19,999 ஆக உள்ளது. இந்த போக்கோ டேஸ் விற்பனை மூலம் ரூ.ரூ.15,999 க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன், 6.67 இன்ச் கொண்ட பெரிய டிஸ்பிளே, 64MP + 13MP + 2MP + 2MP என மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள் மற்றும் 20MP செல்பீ கேமரா, 6000 Mah பேட்டரி, ஸ்னாப்டிராகன் 732G 8 நானோமீட்டர் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்