#AUSvIND: பொறுப்புடன் ஆடிய ராகுல் ,இறுதி நேரத்தில் ஜடேஜா அதிரடி ! ஆஸ்திரேலியாவிற்கு 162 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இன்று நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நிலையில் 161 ரன்கள் அடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பின்ச் , பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் தனது பேட்டிங்கை தொடங்கியது.இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான்,ராகுல் ஆகியோர் களமிறங்கினார்கள்.தொடக்கத்திலே தடுமாறி வந்த தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.இதனைத்தொடர்ந்து களமிறங்கிய விராட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் , மறுபுறம் ராகுல் தனது சிறப்பாக விளையாடினர்.அவருடன் ஓரளவு தாக்குபிடித்த சாம்சன் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.இவரைத்தொடர்ந்து மனிஷ் பாண்டே 2 ரன்கள் , பாண்டியா 16 ரன்கள் ,சுந்தர் 7,ராகுல் 51 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.இறுதி நேரத்தில் ஜடேஜா அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்தினார்.
இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் ஜடேஜா 44 * ரன்களுடன் இருந்தார். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஹென்ரிக்ஸ் 3 விக்கெட்டுகள், ஸ்டார்க் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.இதன் பின்பு 162 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது.