சுவையான கருவாடு வறுவல் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்!
மீன் மட்டுமல்லாது, கருவாட்டை வைத்தும் பல வகையான உணவுகளை நாம் விதவிதமாக செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் கருவாடு வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
நம்மில் பலரும் மீன் என்றாலே மிகவும் விரும்பி சாப்பிடுவது உண்டு. என்றும் போல் இல்லாமல் அன்று கூடுதலாகவும் சாப்பிடுவதுண்டு. அந்தவகையில் மீன் மட்டுமல்லாது கருவாட்டை வைத்தும் பல வகையான உணவுகளை நாம் விதவிதமாக செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் கருவாடு வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கருவாடு – 100 கிராம்
- சின்ன வெங்காயம் – 15
- பூண்டுப்பல் – 2
- காய்ந்த மிளகாய் – 4
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் கருவாட்டை சுத்தம் செய்து அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து லேசாக வேக வைக்கவும். ஆறியவுடன் முள் நீக்கி சதைப்பகுதியை மட்டும் உதிர்த்து வைக்க வேண்டும்.
வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றிரண்டாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதோடு அரைத்தவற்றை கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவேண்டும்.
பாதி வதங்கியதும் உதிர்த்த கருவாடு சேர்த்து கிளறவேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து, முறுகலாகும் வரை கிளறி இறக்கவேண்டும். இப்போது சுவையான கருவாடு வறுவல் தயார்.