ரூ.32,000 டவுன் பேமெண்ட் செலுத்தினால் போதும்.. உங்கள் வீட்டில் Alto 800!
சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ 800 காரை நீங்கள் ரூ.32,000 டவுன் பேமெண்ட் செலுத்தி உங்கள் வீட்டிற்கு எடுத்து செல்லலாம்.
இந்திய மக்கள் பலர், தற்பொழுது கார்கள் வாங்குவதை நோக்கி நகரத் தொடங்கினார்கள். தற்போதைய காலகட்டத்தில் பைக்குகளின் விலை 1 லட்சத்தை நெருங்குவதாலும், பெட்ரோல் விலை அதிகரிக்கும் காரணமாக பலரும் கார்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்தவகையில், விலை குறைவான பல கார்கள் உள்ளது. அதில் பிரபலமடைந்தது, மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ 800 ஆகும்.
இந்தியாவில் சுசூகி நிறுவனம், அதிரடியாக பல கார்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறது. குறிப்பாக, இதன் ஸ்விப்ட், ஸ்விப்ட் டிசையர் மாடல் அதிகளவில் விற்கப்படும் கார்களில் ஒன்றாகும். இந்த ஆல்டோ 800 கார், இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட கார் என்ற சாதனையை பெற்றது. தற்பொழுது இந்த ஆல்டோ 800-ஐ நீங்கள் ரூ.32,000 டவுன் பேமெண்ட் செலுத்தி உங்கள் வீட்டிற்கு எடுத்து செல்லலாம்.
இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 2.92 லட்சம் ஆகும். இதனை நீங்கள் ரூ.32,000 டவுன் பேமெண்ட் செலுத்தி எடுத்தால், மாதத்திற்கு ரூ.6,185 தவணை செலுத்தல் வேண்டும். இந்த தவணை 60 மாதங்களுக்கு இருக்கும் எனவும், வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ. 3,71,100 செலுத்த வேண்டும். வட்டி மட்டும் ரூ. 78,640 செலுத்த வேண்டும்.
அதே, நீங்கள் 6 வருட தவணை முறையை தேர்வு செய்தால், நீங்கள் மொத்தம் ரூ.3,88,008 செலுத்த வேண்டும். இதற்கான வட்டி தொகை ரூ.95,548 ஆகும். அதனையடுத்து நீங்கள் 7 வருட கால தவணை முறையை தேர்வு செய்தால், மொத்தம் 4,05,300 ருபாய் செலுத்த வேண்டும். இதில் வட்டியாக மட்டும் 1,12,840 ரூபாயை செலுத்த வேண்டும் என்பது குறிப்பதக்கது. இந்த தவணை முறைக்கு முன்பணமாக ரூ.32,000 செலுத்த வேண்டும்.