வளர்த்துவிட்டவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வரும் ரஜினிக்கு தங்கர் பச்சான் வாழ்த்து!

Default Image

ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில், வளர்த்துவிட்டவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வரும் ரஜினிகாந்தை வரவேற்கிறேன் என திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான தங்கர்பச்சான் அவர்கள் கூறியுள்ளார்.

ஜனவரி மாதத்தில் தான் கட்சி தொடங்கப் போவதாகவும், டிசம்பர் மாதத்தில் இது குறித்த திகதி வெளியிடப்படும் எனவும் ரஜினி நேற்று தெரிவித்திருந்த நிலையில் அவரது ஆதரவாளர்களும் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து பல்வேறு தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என பன்முகத்தன்மை கொண்ட தங்கர்பச்சான் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், வளர்த்துவிட்டவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வரும் ரஜினிகாந்த் அவர்களை வரவேற்கிறேன். தமிழக அரசியலை வணிகமாக மாற்றிய அரசியல்வாதிகள், அரசியல் தரகர்கள், அரசியல் கட்சிகளின் இணையக்கூலிகள் புலம்பி கதறுவார்கள் எனவும், அதனை எல்லாம் புறம்தள்ளி மக்களைக் குறித்து மட்டுமே கவனம் செலுத்துங்கள் ரஜினி, எனவும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்