#AUSvIND: பழிவாங்குமா இந்தியா?? இன்று தொடங்குகிறது முதல் டி-20 போட்டி!
ஆஸ்திரேலியாக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இன்று முதல் டி-20 தொடர் தொடங்கவுள்ளது.
கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள், மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. அதனைதொடர்ந்து இன்று முதல் டி-20 தொடர் தொடங்கவுள்ளது.
அதன்படி இன்று தொடங்கவுள்ள முதல் டி-20 போட்டி, கான்பெராவின் ஓவன் மைதானத்தில் இந்திய நேரப்படி பகல் 1:40 மணிக்கு தொடங்கவுள்ளது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றிய நிலையில், இந்த டி-20 தொடரை கைப்பற்றும் நோக்குடன் இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அதிரடியாக பந்துவீசிய நிலையில், இன்றைய போட்டியில் அவர் தனது முதல் சர்வதேச டி-20 தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய அணி சார்பில் இன்றைய போட்டியில் சுப்மன் கில், யுஸ்வேந்திர சாஹல் களமிறங்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.