உங்கள் காரின் மைலேஜ் பற்றிய ருசீகர தகவல் மற்றும் மைலேஜ் கணக்கிடும் முறை பற்றி காண்போம்..!!

Default Image

இந்தியாவில் பெட்ரோல்/டீசல் விலை அதிகமாக இருப்பதன் காரணமாக கார் வைத்திருப்பவர்கள் பெரிதும் கவலைப்படக்கூடிய விஷயம் இந்த மைலேஜ் தான்.

இதன் காரணமாக தான் கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தரும் என்பதை விளம்பரங்களில முக்கியமாக குறிப்பிடுவர். பல கார்களுக்கு மைலேஜ் தான் விற்பனைக்கான கீ ஆகவே இருக்கும். இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் கார்கள் தான் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.

பெரும்பாலும் கார் நிறுவனங்கள் சொல்லும் அளவிற்கு கார்கள் மைலேஜை தருவதில்லை அதை விடகுறைவாக தான் தருகின்றன. இதற்கு காரணம் அவர்கள் மைலேஜை கணக்கிடும் முறைதான். அவர்கள் காரை டிரட் மில் போன்ற ஒரு கருவியில் ஓடவிட்டு எவ்வளவு மைலேஜ் தருகிறது என கணக்கிடுவர்.

ஆனால் நாம் இந்திய ரோட்டில் ஓட்டுகிறோம். இங்கு டிராபிக், மோசமான ரோடுகள், என பல விஷயங்களை சந்திக்க வேண்டியது உள்ளதால் கார் நிறுவனங்கள் சொல்லும் மைலேஜை பெறுவது கடினம் தான். எனினும் அவர்கள் சொல்லும் மைலேஜிற்கு சற்று நெருக்கான மைலேஜ் நிச்சயம் கிடைக்கும்.

ஒரே பியூயல் பிராண்ட் பெட்ரோல்/டீசல் போடுவது நல்லது. வேறு வேறு இடங்களில் பெட்ரோலின் தரத்தில் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கும். இதை காரின் இன்ஜினால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதனால் நல்ல மைலேஜ் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

ஒரே பியூயல் ஸ்டேஷன்களின் பெட்ரோலை போடுவது நல்லது. ஒரே பிராண்ட் பெட்ரோல் என்றாலும் ஒவ்வொரு பியூயல் ஸ்டேஷனுக்கும் வித்தியாசம் இருக்கும்.

கார்களில் ஓடோ மீட்டர், டிரிப் மீட்டர் என இரண்டு மீட்டர்கள் இருக்கும். ஓடோ மீட்டர் என்பது நீங்கள் கார் வாங்கியதில் இருந்து இதுவரை எவ்வளவு தூரம் ஓடியிருக்கிறது என்பதை கணக்கிடுகிறது. அதே நேரத்தில் டிரிப் மீட்டர் என்பது நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட நேரத்தில் டிரிப் கார் எவ்வளவு ஓடியுள்ளது என்பதை கணக்கிடுவதற்கானது.

நீங்கள் ஓவ்வொரு முறை காரில் பெட்ரோலை நிரப்பும் போதும் டிரிப் மீட்டரை ரீசெட் செய்து கொள்ளுங்கள், அடுத்த முறை பெட்ரோல் போடும் போது எவ்வளவு தூரம் போயுள்ளீர்கள் என்பதை குறித்து வைத்து கொள்ளுங்கள். இதன் மூலம் ஒவ்வொரு முறை பெட்ரோல் போடும் போதும் உங்களது காரின் மைலேஜை கணக்கிடமுடியும்.

சில கார்களில் டிரிப் ஏ, டிரிப் பி என இரண்டு டிரிப் மீட்டர்கள் இருக்கும் இது நாம் அதிக தூரம் டிரிப் செல்லும் போது டிரிப் முடியும் முன்பே அடிக்கடி பெட்ரோல் போட வேண்டிய சூழ்நிலை வரும் அந்த நேரங்களில் டிரிப் ஏ வில் முழு டிரிப்பிற்கான தூரத்தையும், டிரிப் பி யில் ஒவ்வொரு முறை பெட்ரோல் போடும் போதும் பயணம் செய்த தூரத்தை கணக்கிட உதவும்.

ஒவ்வொரு டிரைவர் மாறும் போதும் பெட்ரோலின் அளவையும், பயண தூரத்தையும் கணக்கிட வேண்டும். இதன் மூலம் யார் டிரைவிங்கில் அதிக பெட்ரோல் செலவாகிறது என்பதை கணக்கிட்டு அவர்களை டிரைவிங் ஸ்டிலை மாற்றியமைப்பது குறித்து ஆலோசிக்கலாம்.

உங்கள் காரின் மைலேஜ் என்பது பெட்ரோல் மற்றும் இன்ஜின் செயல்பாட்டில் மட்டும் இருப்பதில்லை, உங்கள் காரின் மற்ற பாகங்களை பெருத்தும் மாறுகிறது. உதாரணத்திற்கு உங்கள் காரின் வீல்களில் ஏர் குறைவாக இருந்தால் வீல் சுற்றுவதற்கு சற்று சிரமப்படும் அந்த நேரங்களில் பெட்ரோல் அதிகம் செலவாகும். சில நேரங்களில் பியூயல் பம்ப்களில் உள்ள பிரச்சனைகளாலும் மைலஜில் பாதிப்பு ஏற்படலாம் அதனால் நீங்கள் காரை சரியான நேரத்தில் பராமரித்து கொள்ளவது நல்லது.

தொழிற்நுட்பம் இன்று செல்போனில் கார் மைலேஜை கணக்கிடும பல ஆப்ஸ்கள் வந்து விட்டது. இதில் நாம் காருக்கு எப்பொழுது எவ்வளவு பெட்ரோல் போடுகிறோம் என்பதை பதிவு செய்தாலே போதும், அது நாம் அடுத்த பெட்ரோல் போடும் போது எவ்வளவு தூரம் பயணத்துள்ளோம் என்பதை கணக்கிட்டு நமது காரின் மைலேஜை கூறுகிறது. ஆதே நேரங்களில் நாம் செயல்பாடுகளை கணக்கிட்டு இன்னும் அதிக மைலேஜை பெற என்ன செய்ய வேண்டும் என்ற டிப்ஸ்களையும் வழங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin