சூர்யாவின் அடுத்த படம் குறித்து கசிந்த தகவல்.!
பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா40’ படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
நடிகை சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .அதனை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனுடன் வாடிவாசல் மற்றும் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார்.மேலும் கௌதம் மேனன் இயக்கும் நவரசா என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
சூரரை போற்று படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யா பாண்டியராஜ் இயக்கத்தில் “சூர்யா 40” படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது .சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் ,இன்னும் சில தினங்களில் படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
Pre productions in Final stage. @Suriya_offl ‘s #Suriya40 shooting will be started in few days. Update regarding Cast & crew soon ❤
— #Suriya40 (@Suriya40_Movie) December 3, 2020