ரஜினியின் அரசியல் அறிவிப்பு.! வாழ்த்துக்களை தெரிவிக்கும் பிரபலங்கள்.!
ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்கு கார்த்திக் சுப்பராஜ், அனிருத் ,ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும் அதற்கான தேதி டிசம்பர் 31ல் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும் வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில், மக்களிடையே பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதிமத சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சியம் என்று பதிவிட்டுள்ளார். மேலும், அதிசயம், அற்புதம் நிகழும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதில் குறிப்பாக, மாத்துவோம்எல்லாத்தையும்மாத்துவோம் இப்போஇல்லேன்னாஎப்பவும்_இல்ல என்று ஹேஸ்டேக்-வுடன் பதிவிட்டிருந்தார் .
இதற்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் .அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் இனி தான் ஆரம்பம் , தலைவர் ஆட்டம் ஆரம்பம் என்று குறிப்பிட்டுள்ளார்.அதே போன்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் , தலைவா வா தலைவா என்று மாஸ்ஸான ட்வீட்டை பகிர்ந்துள்ளார் .மேலும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் அவர்களும் தலைவா என்று கூறி ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகை குஷ்பு அவர்கள்,இறுதியாக நீங்கள் எடுத்த முடிவு மிகவும் நல்லது என்றும், எப்போதும் போலவே உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள் என்று நம்புவதாகவும் கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும் ,நடிகருமான ராகவா லாரன்ஸ் உங்களது மில்லியன் கணக்கான ரசிகர்களை போன்று இந்த நிமிடத்திற்கான நானும் காத்திருந்ததாகவும் ,உங்களது அனைத்து ஆசைகளும் நிறைவேற ராகவேந்திரா சாமியிடம் பிரார்த்தனை செய்வதாக கூறிய அவர், இந்த கொரோனா சூழலிலும் உங்களது உடல்நலத்தை கூட பாராமல் மக்களுக்கு சேவை செய்ய முன் வந்துள்ளீர்கள் என்று கூறினார்.இந்த செய்தி தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக கூறி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும் பல பிரபலங்களும் , ரசிகர்களும் சமூக ஊடகங்கள் வாயிலாக ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்கு வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.
இனி தான் ஆரம்பம்..
தலைவர் ஆட்டம் ஆரம்பம் ????????????????????????#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல pic.twitter.com/zj8amBXklR— Anirudh Ravichander (@anirudhofficial) December 3, 2020
Wow……. Thalaivaaaaa வா தலைவா ????????????????#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல https://t.co/wC8N4Ioalx
— karthik subbaraj (@karthiksubbaraj) December 3, 2020
Dearest @rajinikanth Sir. Great to know you are finally taking the plunge. Wishing you all the very best in your new role. Like always, very sure you will do to the best of your abilities. Good luck to you Sir. ????????????????????????????????????❤
— KhushbuSundar ❤️ (@khushsundar) December 3, 2020
Thank you so much Thalaiva. So happy to hear this news ????@rajinikanth https://t.co/AttBt0Lw9C pic.twitter.com/zDPSGxITp5
— Raghava Lawrence (@offl_Lawrence) December 3, 2020
????????????????????????????????????????????????????????????????????@rajinikanth Thalaiva https://t.co/ci8BjvWiUu
— RK SURESH (@studio9_suresh) December 3, 2020