நாட்டின் 2-வது சிறந்த காவல் நிலையமாக சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் தேர்வு..!
கடந்த 2016-ம் ஆண்டு முதல் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தலைசிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த விருது குற்றங்களை கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், சட்ட ஒழுங்கைப் பாதுகாத்தல், விபத்துகளை குறைத்தல், புகார் அளிக்க வரும் பொதுமக்களை அணுகும் முறை ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையங்களில் விருது பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள சேலம் மாநகரத்தில் அமைந்துள்ள சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.