எச்சரிக்கை: 14 கி.மீ. வேகத்தில் நகரும் புரெவி.. மணிக்கு 70-90 வேகத்தில் காற்று வீசுமாம்!

Default Image

புரெவி புயல், தற்பொழுது 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், மணிக்கு 70-90 கி.மீ. வரை காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் நேற்று இரவு கரையை கடந்தது. இதனையடுத்து இன்று இரவு அல்லது நாளை காலை பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் அதிகனமழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த புயல் தற்பொழுது பாம்பனுக்கு கிழக்கு-வடகிழக்கு பகுதியில் 80 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்தது. தற்போது மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகரும் இந்த புயலால் குமரி, பாம்பன், ராமேஸ்வரம், மன்னார் வளைகுடா பகுதிகளில் 70-90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதற்குப் பிறகு மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு அல்லது நாளை காலை பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையில் கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்