#BREAKING: விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக போராட்டம் அறிவிப்பு..!
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகின்ற 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெறுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளார்.
சேலத்தில் நடைபெறும் போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தற்போது டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேச விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.