மதுரை போற்றும் “மீனாட்சி” திருக்கல்யாணம் எவ்வாறு நடந்தது…??
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம் ஏனென்றால் அம்பாள் இப்பூவுலகில் அவதரித்து அகிலாண்ட நாயகனை அடைந்தாள் என்பதை நினைவூட்டும் விதமாக ஒவ்வொரு வருடமும் திருக்கல்யாணம் வைபம் நடைபெறுகிறது
மீனாட்சி திருக்கல்யாண வரலாறு…!
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். இவர்களது திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டு கொண்டாடியது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்றதும் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர்.
திருமணத்திற்கு நாள் குறித்த அன்று மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறையவே தனது மணாளனை முதன் முதலாக சந்தித்த அந்த அனுபவம் நினைவு கொள்ளச் செய்தது. எட்டு திக்கும் வென்று, கயிலையை வென்றுவர சென்றபோதுதான் சிவபெருமானை மீனாட்சி முதன் முதலாக சந்தித்தாள் சிவபெருமானின் அருள்பார்வை பதிந்த அந்த நிமிடத்தில் மீனாட்சியின் மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போனது. அப்போதுதான், தன்னுடைய மணாளன் இவரே என்று எண்ணி நாணம் கொண்டாள் . ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள்வதாக சிவபெருமான் உறுதியளித்ததை மீனாட்சி நினைத்து மகிழ்ந்தாள்.
அப்போது, அவள் ஆவலோடு எதிர்பார்த்த காத்திருந்த சிவபெருமான் வந்து கொண்டிருந்தார்.மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவகனங்கள் உள்ளிட்டவர்களும் புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சிதரும் சிவபெருமான் அந்த நிலையில் இருந்து மாறி சுந்தரேசுவராக-மதுரை மாப்பிள்ளையாக மதுரைக்குவந்தார். பங்குனி உத்திர நாளில் நல்ல நேரம் வந்ததும் மீனாட்சியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தனது மனைவியாக சிவபெருமான் கரம் பிடித்தார்.
திருமணம் முடிந்ததும் தடபுடலாக விருந்து நடக்குமே…?
அது மீனாட்சி கல்யாணத்திலும் நடந்தது. மலைபோல் சாதம் சமைக்கப்பட்டது. ஆனால் ஒரு பகுதி மட்டுமே காலியானது. இதையறிந்த மீனாட்சி, இது பற்றி சிவபெருமானிடம் கூறினார்.உடனே சிவபெருமான் குண்டோதரர்கள் இருவரை அங்கு வரவழைத்தாரமீதமுள்ள சாதம், பலகாரங்களை சாப்பிடுமாறு அவர்களை பணித்தார்
அடுத்த நிமிடங்களிலேயே அத்தனை உணவு வகைகளையும், பலகாரங்களையும் வேகமாக தின்று தீர்த்து விட்டனர். இருவருக்கும் தாகம் ஏற்பட்டது தாகத்தை தணிக்க பெரிய அண்டாக்களில் இருந்த தண்ணீரை மடக் மடக் என்று குடித்தும் தாகம் அடங்கவில்லை. பெரிய அண்டாக்கள் எல்லாம் அவர்களுக்கு சிறிய டம்ளர்கள் போல் இருந்தன.
தாகம்… தாகம்… என்று கத்தினார். அப்போது சிவபெருமான் அவர்களின் தாகத்தை தணிக்கும் பொருட்டாக, தன் கையை வைத்து அங்கு ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி நீரை குடித்து குண்டோதரர்கள் தாகம் தணிந்தனர். சிவபெருமான் தன் கையை வைத்து உருவாக்கியதால் அந்த நதி “வைகை’’ ஆயிற்று.
மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,