இரவு நேர பயணம் செல்வதற்கு முன் நாம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள்…!!

Default Image

இந்தியாவில் இரவு நேரங்களில் தான் அதிக அளவு வாகன விபத்துக்கள் நடந்து வருகிறது.இதை தவிர்க்க நாம் இரவு நேர பயணத்தின் போது கடைபிடிக்க வேண்டிய 8 விஷயங்களை காண்போம்.

இரவு நேர பயணம் என்பது ஒரு த்ரில்லான அனுபவம் தான், அது அழகான விஷயம் கூட குளிர்ந்த காற்று,அமைதியான சூழல், இடைஞ்சல்கள் இல்லாத ரோடு வேகமான பயணம் இப்படி பல இன்பம் இருக்கும்போது அது யாருக்கு தான் பிடிக்காது.

இரவு நேர பயணம் செல்வதற்கு முன் நாம் சில விஷயங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும். பயணத்தின் போதும் சில விஷயங்களை கடை பிடிக்க வேண்டும், அவைகளை வரிசையாக கீழே பார்ப்போம்

1. இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும், பகல் நேரத்தில் வெளிச்சமாக இருப்பதால் தூரத்தில் வரும் வாகனம்கூட எளிதாக தெரியும், இரவு வெளிச்சம் உங்கள் வாகனத்தின் ஹெட்லைட்டை பொருத்தே இருப்பதால் பகல் நேரத்தில் வாகனம் ஓட்டும் போது செலுத்தும் கவனத்தை விட இரவு நேரம் அதிக கவனத்தை செலுத்த வேண்டும்.

2. இரவு நேர பயணத்தை துவங்கும் முன் உங்கள் வாகனத்தின் ஹெட்லைட்டை சரி பார்த்து கொள்ளுங்கள் அதில் உள்ள ஹைபீம், லோபீம் சரியாக வேலை செய்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள், அதே நேரத்தில் காரில் உள்ள கேபின் லைட்டுகள் எங்குள்ளது, அதற்கான ஸ்விட்ச் எங்கு உள்ளது. என்பதை பார்த்துக்கொள்ளுங்கள், இது கார் ஓட்டும் போது தேவைப்படாவிட்டாலும் சில அவசர காலங்களில் பயன்படுத்த வேண்டும்.

3.இரவு நேரத்தில் நீங்கள் ரோட்டில் பயணம் செய்யும் போது ஒளிரும் எச்சரிக்கை பலகைகள், நடுவே உள்ள கோடுகள் எல்லாம் தெளிவாக தெரியும், இருந்தாலும் பழக்கம் இல்லாத ரோட்டில் செல்லும் போது சற்று எச்சரிக்கையாக செல்ல வேண்டும் ரோட்டில் உள்ள குழிகள், வேகத்தடைகள் நமக்கு தெரியாது. இதனால் கூட விபத்துக்கள் ஏற்படலாம்.

4. பகல் நேரம் வாகனத்தில் செல்லும் வேகத்தை விட இரவு நேரம் குறைந் வேகத்தில் செல்ல வேண்டும். போதிய வெளிச்சம் இல்லாமல் இருப்பதால் நீங்கள் வேகமாக செல்லும் போது எதிரில் வரும் வாகனம் அருகில் வரும்போது தான் உங்களுக்கே தெரியும் அந்த நேரத்தில் நீங்கள் வேகத்தை குறைப்பது கடினம், இதற்கு முதலிலேயே குறைவான வேகத்தில் செல்வது நல்லது.

5.இரவு ஹெட்லைட்டை ஹைபீமில் வைத்தால் தான் ரோடு கிளியராக தெரியும், ஆனால் எதிரே வாகனம் வரும் போது ஹெட்லைட்டை லோ பீமிற்கு மாற்றிவிடுங்கள், இல்லை என்றால் எதிரே வரும் வாகன ஓட்டுநருக்கு கண்ணில் கூச்சம் ஏற்பட்டு விபத்து நடக்க நெரிடலாம். இந்த தவறை பெரும்பாலானர்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக பெரிய ரக வாகனங்களை ஓட்டுபவர்கள் எதிரே சிறிய ரக வாகனம் வந்தால் ஹைபீமை குறைப்பதில்லை. எந்த ரக வாகனமாக இருந்தாலும் விபத்து நடந்தால் அவதி நமக்கு தானே.

6.இரவு நேரங்களில் சாலையோரங்களில் சிறிய மிருங்களின் நடமாட்டம் இருக்கும் ஒரு வேலை நீங்கள் காட்டு பகுதி வழியாக செல்கிறீர்கள் என்றால், மான், மிளா, ஓநாய் போன்ற காட்டு மிருங்களின் நடமாட்டம் இருக்கும் அவைகளுக்கு ஹைட்லைட் வெளிச்சம் பழக்கம் இல்லாததால் ஒரு இடத்தில் வெளிச்சம் வந்ததும் அந்த இடத்திற்கு தான் அவை பாயும். அதனால் அதில் கவனமாக இருப்பது நல்லது.

7. இந்தியாவில் இரவு நேரங்களில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகம். அதனால் நீங்கள் என்னதான் கவனமாக சென்றாலும் எதிரில் வரும் வாகனத்தினால் கூட விபத்துக்கள் நடக்கலாம். அதனால் எதிரில் வாகனத்தின் மீதும் கவனம் இருக்க வேண்டும்.

8. இரவு பயணத்தின் போது கவனச்சிதறலை ஏற்படுத்தும் விஷயங்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக இரவு பயணத்தின் போது பாட்டு கேட்பதை தவிர்க்கலாம்,பாட்டு கேட்டால் தூக்கம் அதிகமாக வரும் அதனால் பயணத்தின் போது பாட்டு கேட்பதை தவிர்க்க வேண்டும், முக்கியமாக டிரைவருக்கு அருகில் அமர்ந்திருப்பவர் தூங்காமல் பார்த்து கொள்ள வேண்டும், டிரைவருக்கு அருகில் ஒருவர் அமர்ந்து தூங்கினால் டிரைவருக்கும் தூக்கம் வர வாய்ப்புள்ளது. இருவரும் பேசிக்கொண்டே வருவதல் நலம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Gargi Ranpara (8-year) died yesterday morning at a private school in Ahmedabad
heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin