சப்பாத்திக்கு பொருத்தமான பட்டர் பீன்ஸ் குருமா செய்முறை.!
உங்களுக்கு பட்டர் பீன்ஸ் குருமா செய்முறை பற்றி தெரியுமா..? கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டர் பீன்ஸ் குருமாவின் செய்முறைப் படித்து அதனை செய்து சுவையுங்கள் மக்களே…
பட்டர் பீன்ஸ் குருமாவை சப்பாத்திக்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இது குழந்தைகள் முதல் முதியவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். அதே போல் ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பட்டர் பீன்ஸ் – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கிராம்பு & பட்டை – 2 பட்டை
பூண்டு – 5
செய்முறை:
முதலில் 200 கிராம் பட்டர் பீன்ஸின் தோலை நீக்கி ஒரு குக்கரில் போட்டு தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3 நிமிடம் விசில் அடிக்கிற வரை வேகவைத்து எடுக்கவும். நன்றாக வெந்த பிறகு மிக்ஸியில் ஒரு துண்டு தேங்காய் அரைத்து நாலு பூண்டு, சின்ன துண்டு இஞ்சி சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு தேவையான் பொருட்கல் அனைத்தையும் சேர்த்து தாளித்த பின் அதில் வெட்டி வைய்த்த வெங்காயத்தைப் போட்டு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
இப்பொது, அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து, 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு பட்டர் பீன்ஸை சேர்த்து கொதிக்க வைத்து இறுதியில் கொத்தமல்லியைத் தூவினால் சுவையான பட்டர் பீன்ஸ் குருமா ரெடி….