உருவாகியுள்ள புதிய புயல் – முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
புயல் பாதிப்புகள்,புதிதாக வரவுள்ள புரெவி புயல் மற்றும் அதன் முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அண்மையில் வந்த நிவர் புயல் காரணமாக சேதங்கள் அதிகம் இல்லையென்றால் பல இடங்களில் குளம்போல நீர் தேங்கியுள்ளது.மேலும் புயல் ஏற்படுத்திய சேதங்களை சீரமைக்கும் பணிகளும், நடைபெற்று வருகிறது.நிவர் புயல் முடிவடைந்த நிலையில் ,தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ,இன்று புயலாக வலுவடைந்துள்ளது.
இந்நிலையில் மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.இந்த ஆலோசனையில்,வடகிழக்கு பருவமழையின் அளவு, நிவர் புயல் பாதிப்புகள்,புதிதாக வரவுள்ள புரெவி புயல் மற்றும் அதன் முன்னெச்சரிக்கை குறித்தும் மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.