மிகச்சரியான முடிவை எடுத்தமைக்கு சந்தோஷ் பாபு அவர்களுக்கு நன்றி! அறிக்கை வெளியிட்ட கமலஹாசன்!
ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு தமிழகத்தை சீரமைக்கும் நற்பணியில் நம்முடன் இணைந்துள்ளார், மிகச்சரியான முடிவை எடுத்தாமைக்கு திரு.சந்தோஷ் பாபு அவர்களை பாராட்டுகிறேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாரத் நெட் விவகாரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மக்கள் நீதி மய்யத்தில் கமலஹாசன் முன்னிலையில் இணைந்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் அவர்கள் கூறுகையில், ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு ஓய்வுபெற்ற பின், அவர் தனியாக மக்கள் சேவை செய்ய வேண்டும் என நினைத்து, அவர் தேர்தெடுத்துள்ள கட்சியும், அவர் இணைந்துள்ள நேரமும் சரியான சமையத்தில் இருக்கிறது என தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு தமிழகத்தை சீரமைக்கும் நற்பணியில் நம்முடன் இணைந்துள்ளார். மிகச்சரியான முடிவை எடுத்தமைக்கு சந்தோஷ் பாபு அவர்களை பாராட்டுகிறேன் என்றும் அவரை இந்த கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்துள்ளோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.