புரெவி புயல் முன்னெச்சரிக்கை: தேசிய பேரிடர் மீட்புக் குழு கன்னியாகுமரி விரைந்தது.!

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றடைந்தது.
தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது, இன்று இரவு புயலாக வலுவரும். இந்த புயலுக்கு “புரெவி” என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு கன்னியாகுமரி சென்றடைந்துள்ளது. மேலும், கடலுக்கு சென்ற குமரி மீனவர்கள் கரை திரும்ப சாட்டிலைட் போன் மூலம் அறிவுறுத்தபட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த புயல் சின்னம் காரணமாக சென்னை, தூத்துக்குடி, ராமேஸ்வரம், பாம்பன், காரைக்கால், குளச்சல் உள்ளிட்ட 11 துறைமுககளில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
அந்த வகையில், வங்கக்கடலில் உருவாகும் புரெவி புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.