ஹேக்கர்கள் கைவரிசை.. ரூ.7,400 முதல் முன்னணி நிறுவனங்களின் CEO, CFO, CMO-ன் இ-மெயில் பாஸ்வேர்டு விற்பனை!

Default Image

பல முன்னணி நிறுவனங்களின் CEO, CFO மற்றும் CMO உள்ளிட்டோரின் மைக்ரோஃசாப்ட் இ மெயில் ஐடியை பாஸ்வேர்டுடன் $100-$1,500 (இந்திய மதிப்பின்படி ரூ.7,400 முதல் ரூ.1.1 லட்சம்) வரை ஹேக்கர் ஒருவர் விற்பனை செய்துள்ளது, பலரை அதிர்ச்சிக்குளாகியது.

உலகளவில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களின் CEO, CFO மற்றும் CMO உள்ளிட்டோரின் மைக்ரோஃசாப்ட் இ மெயில் ஐடியை பாஸ்வேர்டுடன் டார்க் வெப்பில்ஹேக்கர் ஒருவர் ரூ.7,400 முதல் ரூ.1.1 லட்சம் வரை விற்பனை செய்து வருகிறார். இதுதொடர்பாக ZDNet நிறுவனம், ஆய்வுகள் மேற்கொண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் வெளியான தகவலின்படி, பல முன்னணி நிறுவனங்களின் CEO, CFO மற்றும் CMO ஆகியோரின் ஆஃபிஸ் 365 மற்றும் மைக்ரோசாஃப்ட் இ-மெயில் முகவரிகளை ஹேக்கர்கள் திருடி, அந்த நிறுவனத்தின் மதிப்பு மற்றும் அதில் உள்ள தகவல்களுக்காக மதிப்புகள் ஆகியவற்றுக்கு ஏற்ப ஒரு விலையை நிர்ணயித்து, ரஷிய மொழியில் இயங்கும் வலைத்தளமான exploit.in வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் CEO, CFO, CMO உள்ளிட்டவர்களையும் தவிர்த்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வேலைப் பார்க்கும் மேனேஜர், முக்கியமான ஊழியர்கள், தொழில்நுட்ப பிரிவில் வேலைபார்க்கும் ஊழியர்கள் ஆகியோரின் இ மெயில் ஐடியும் திருடப்படும் காரணத்தினால், அந்த நிறுவனத்தின் CEO முதல் வேலைபார்க்கும் ஊழியர்கள் வரை அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுபோல இ-மெயில்களை ஹேக் செய்து விற்பனை செய்பவர், தன்னிடம் இதுபோன்று நூற்றுக்கணக்கான இ-மெயில்களின் பாஸ்வர்டு இருப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி, எப்படி கிடைத்தது என்பது குறித்து விளக்க மறுத்து விட்டார். தற்பொழுது மிகப்பெரிய நிறுவனங்களின் செயலதிகாரிகளின் இ-மெயிலில் உள்ள தகவல்கள், பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும், இது பாலுக்கு காவல் பூனை போல இருக்கின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth