மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வெளியான மாஸ் தகவல்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் ஜனவரி 13-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த திரைப்படம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.சமீபத்தில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி இந்திய அளவில் சாதனை படைத்தது .இந்த நிலையில் நேற்றைய தினம் மாஸ்டர் படத்தினை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இதுகுறி மாஸ்டர் படக்குழுவினர் கூறியுள்ளதாவது , மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக முதல் திரையரங்குகளில் தான் வெளியாகும் ,அதாவது பொங்கலுக்கு மாஸ்டர் படத்தினை தியேட்டரில் வெளியிட உள்ளதாகவும் ,அதன் பின்னரே ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . தற்போதைய சூழலில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவது தான் சரியாக இருக்கும் என்றும்,எப்போது வெளியிடப்படும் என்பது விரைவில் தெரிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதாவது மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் ஜனவரி 13-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.