ஆரி-சம்யுக்தாவின் வளர்ப்பு விவகாரம்.! குறும்படம் போட்டதால் வசமாக சிக்கிய சம்யுக்தா.!
ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்று சம்யுக்தா கூறிய விவகாரம் தொடர்பாக இன்றைய நிகழ்ச்சியில் குறும்படம் போட்டு உண்மையை காட்டவுள்ளார் கமல்ஹாசன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களிடம் கேள்விகள் எழுப்பி வச்சு செய்வது வழக்கம் .ஆனால் இந்த சீசனில் அவர் அதிகம் கண்டிக்காமல் அறிவுரைகள் என்ற பெயரில் டிப்ஸ்களை வழங்கி வருகிறார் .இது பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அது மட்டுமின்றி ஞாயிறன்று நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் .
இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் செக்கன்ட் புரோமோவில்,கால் சென்டர் டாஸ்க்கில் சனமிடம் ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்று சம்யுக்தா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதே போன்று ஆரி சம்யுக்தாவின் தாய்மையை குறித்து கூறியதாக குற்றம் சாட்டியிருந்தார் .இதனை குறும்படம் காட்டி புரிய வைக்குமாறு நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் வலியுறுத்தி வந்தனர்.அதனை இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் நிறைவேற்றவுள்ளார் .
இது தொடர்பாக சம்யுக்தாவிடம் நீங்க இந்த நிகழ்ச்சியில் வளர்ப்பு என்ற வார்த்தையை எத்தனை முறை பயன்படுத்தி உள்ளீர்கள் என்று கமல் கேட்க,நிறைய முறை பயன்படுத்தியதாக கூற அப்போ தெரிஞ்சு தான் பயன்படுத்துனீங்க என்று கமல் கேட்கிறார்.மேலும் சம்யுக்தாவிடம் உங்கள் தாய்மையை குறித்து அவர் தாக்குதல் நடத்தவில்லை என்றும், வேண்டுமென்றால் ஆரி என்ன சொன்னார் என்று பார்த்திடுவோம் .இது குறும்படமும் இல்லை , அர்ச்சனா கூறியது போல குறுமா படமும் இல்லை என்று கூறி குறும்படத்தை போட புரோமோ முடிவடைகிறது .இதோ அந்த வீடியோ
#BiggBossTamil இல் இன்று.. #Day56 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/bzjq1gZT9K
— Vijay Television (@vijaytelevision) November 29, 2020