புதிய கொரோனா சோதனை முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல்.!
கொரோனா தொற்றை கண்டறிவதற்கான புதிய முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பு ஆய்வகமான ஹைதராபாத்தில் உள்ள செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் உருவாக்கியுள்ள கொரோனா தொற்றை கண்டறிவதற்கான புதிய முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒப்புதல் நேற்று அளித்துள்ளது.
இது ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு செலவுகளையும் குறைக்க முடியும் என அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் நேற்று கூறியது.
இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 2020 முதல் கொரோனா வைரஸ் மாதிரிகளை ஹைதராபாத்தில் உள்ள செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் கையாண்டு வருகிறது. தெலங்கானாவில் உள்ள சுகாதாரப் பணியாளர்களோடு நெருங்கி பணிபுரிந்த பிறகு, பரிசோதனையை தாமதமாக்கும் சில விஷயங்களை இம்மையம் கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து இந்த புதிய முறையை உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.