இன்னும் சற்று நேரத்தில் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.!
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று 71-வது முறையாக உரையாற்றுகிறார்.
இந்த உரையில் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களோடு உரையாடுகிறார்.
அந்த வகையில், கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், வருகின்ற பண்டிகை காலத்தை தொடர்ந்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் மோடி வலியுறுத்துவார் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகிறது. மேலும், நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமுமாகவும் இன்னும் சற்று நேரத்தில் இந்த உரை தொடங்கவுள்ளது.