கார்த்திகை தீபம்: இன்று மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபம் ஏற்றம்.!

Default Image

இந்துக்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். இன்று மக்கள் தங்களது வீட்டு வாசலில், வண்ண கோலமிட்டு, களிமண்,  அகல்விளக்குகளை வாங்கி எண்ணெய் விட்டு, திரி வைத்து விளக்கேற்றி வைப்பர்.

திருவண்ணாமலையின் அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தற்போது, இன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு திருவண்ணாமலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருவண்ணாமலை கோயிலில் தீபாராதனை செய்யப்பட்டு மகாதீப கொப்பரை நேற்று மலை மீது எடுத்துச்செல்லப்பட்டது.

இந்நிலையில், இன்று அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அடுத்ததாக 2,668 அடி உயர மலை மீது நாளை மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனால், தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ நெய்யும், துணிகளும் தயார் நிலையில் உள்ளது.

இதற்கிடையில், கொரோனா காரணமாக தீபத்திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்களுக்கு வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை 3 நாட்களுக்கு திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்