OLA, Uber வாகனங்களின் ஓட்டுநரா நீங்கள்? அப்ப இதை கண்டிப்பா படிங்க?
OLA, Uber போன்ற நிறுவனங்களில் இணைந்து வாடகைக்கு கார்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு, பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 80% வழங்க வேண்டும்.
இன்று வாகனத்தை வாடகைக்கு வாங்கி ஓட்டும் ஓட்டுனர்களுக்கு, அந்த வாகனத்தின் உரிமையாளர்கள் மிகக்குறைந்த அளவிலான பணத்தையே ஓட்டுநர்களுக்கு ஊதியமாக அளிக்கின்றனர். அந்த வகையில், OLA, Uber போன்ற நிறுவனங்களில் இணைந்து வாடகைக்கு கார்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு, பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 80% வழங்க வேண்டும் என்றும், மீதமுள்ள 20%-த்தை பெற வேண்டும் என மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், சக பயணிகளுடன் தங்கள் கட்டணத்தை பகிர்ந்து கொள்ளும் முறை பெண்களுக்கு மட்டுமே இனி பொருந்தும் என்றும், அவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்தால் 10% கட்டணத்தை ஓட்டுனர்கள் அவர்களிடம் வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.