இந்திய வீரர்களின் ஊதியத்தில் 20% அபராதம்.. ஐசிசி அறிவிப்பு..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா பந்து வீச அதிகம் நேரம் எடுத்தக்கொண்டதாக கூறி இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 20% அபராதமாக விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்திய அணி கேப்டன் கோலி இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் எனவே முறையான விசாரணை தேவையில்லை என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆன்-பீல்ட் நடுவர்கள் ராட் டக்கர் மற்றும் சாம் நோகாஜ்ஸ்கி, டிவி நடுவர் பால் ரீஃபெல் மற்றும் நான்காவது நடுவர் ஜெரார்ட் அபுட் ஆகியோர் இந்த குற்றச்சாட்டை சுமத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் ஆரோன் பிஞ்ச் (114) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (105) அடித்தனர், டேவிட் வார்னர் (69) மற்றும் மேக்ஸ்வெல் (41) ரன்கள் அடித்தனர். இதனால், ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 374/6 ரன்கள் எடுத்தனர். அதற்கு பிறகு இறங்கிய இந்தியா 50 ஓவரில் 308/8 ரன்கள் மட்டுமே எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு இறங்கிய ஹார்திக் பாண்ட்யா (90), ஷிகர் தவான் (74) ரன்கள் எடுத்தனர்.
India players have been fined for maintaining a slow over-rate in their 1st ICC Men’s @cricketworldcup Super League ODI against Australia.
Details ????
— ICC (@ICC) November 28, 2020
மேலும், கடந்த மார்ச் மாதம் டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணி களம் கண்டது. அதன் பிறகு இந்தியா மேற்கொள்ளும் முதல் சர்வதேச பயணம் இதுவாகும்.