ஈரானின் அணு விஞ்ஞானி மொஹ்சென் கொலை – இஸ்ரேலை குற்றம் சாட்டிய ஈரான்!
ஈரானின் உயர்ந்த அணு விஞ்ஞானி மொஹ்சென் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இஸ்ரேலை ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானின் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரான மொஹ்சென் பக்ரிசாதி அவர்கள் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இவரது படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த ஈரானின் வெளியுறவு மந்திரி மற்றும் அரசு சார்பில் இது படுகொலை மற்றும் பயங்கரவாத சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பயங்கரவாத சம்பவத்தில் இஸ்ரேலுக்கும் பங்கு இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை அமைதியான நோக்கங்களுக்காக வலியுறுத்தி வருகின்ற நிலையில் 2010 மற்றும் 2012 க்கு இடைப்பட்ட காலங்களில் நான்கு ஈரானிய அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் நாட்டின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொலையில் இஸ்ரேல் உடந்தையாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது, 2018 ஆம் ஆண்டு மே மாதம் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் அவர்கள் பங்கும் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஈரான் தயாரித்த செரிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவு அதிகரித்து இருப்பது குறித்த புதிய பிரச்சனைகள் ஏற்கனவே எழுந்து வருகின்ற சூழ்நிலையில், தற்பொழுது அணு விஞ்ஞானியின் படுகொலை ஈரானில் கவலை அளிக்கக்கூடிய ஒரு செய்தியாக இருப்பதாகவும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.