கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மாராட்டிய எம்.எல்.ஏ!
மராட்டிய மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ பாரத் பால்கே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் கட்டுக்குள் வந்தபாடில்லை. இந்த வைரஸ் பாதிப்பானது பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரையும் பாதித்து வருகிறது.
இந்நிலையில், மராட்டிய மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ பாரத் பால்கே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், புனே தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, இவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.