வைரல் வீடியோ.. மைதானத்தில் ‘புட்டபொம்மா’ நடனம் ஆடிய வார்னர்..!

Default Image

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவி, மகள்களுடனும் சேர்ந்து டிக்டாக்கில் “புட்டபொம்மா” பாடலுக்கு நடனம் ஆடினார். இவரின் டிக்-டாக் வீடியோ இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவியது.

இந்நிலையில், இன்று, இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நடைப்பெற்றது. முதல் இன்னிங்ஸில் டேவிட் வார்னர் 69 ரன்கள் குவித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது, ரசிகர்கள் புட்டபொம்மா என கூற உடனே வார்னர் “புட்டபொம்மா” பாடலுக்கு நடனம் ஆடினார். அந்த வீடியோ இப்போது ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.

AUSvIND: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வெற்றி..!

டேவிட் வார்னர் “புட்டபொம்மா” பாடலுக்குநடனம் ஆடுவது இது முதல் முறை அல்ல. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2020 இல் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேஆஃப்க்கு நுழைந்தபோது “புட்டபொம்மா” பாடலுக்கு நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்